தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் மற்றும் பிரதித் தலைவர் மயில்வாகனம் உதயகுமார் ஆகியோர் இணைந்து ஆரம்பித்துள்ள ‘ உயிர்காக்க மருந்து ‘ என்னும் திட்டத்தின் கீழ் மற்றும் ஒரு தோட்டப்புற வைத்தியசாலைக்கு அத்தியாவசிய மருந்து பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
தலவாக்கலை மடக்கும்பரை தோட்ட வைத்தியசாலைக்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவர் மயில்வாகனம் உதயகுமார் தலைமையில் இந்த அத்தியாவசிய மருந்து பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மடக்கும்பரை தோட்டம் மற்றும் வட்டகொடை தோட்டத்தை சேர்ந்த சுமார் 10க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வசிக்கும் 2000ற்கும் அதிகமான மக்கள் இதன்மூலம் நன்மை அடைகின்றனர்.
நோர்வூட் கிளங்கன் வைத்தியசாலைக்கு மருந்து பொருட்கள் வழங்கி வைத்தது போன்று தோட்டப்புற வைத்தியசாலைகளுக்கும் மருந்து பொருட்கள் வழங்கிய வைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு அண்மையில் நுவரெலியா கந்தபளை தோட்ட வைத்தியசாலைக்கு ஒரு தொகை அத்தியாவசிய மருந்து பொருட்கள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
‘உயிர்காக்க மருந்து’ திட்டத்தின் கீழ் தொடர்ந்து தோட்டப்பகுதி வைத்தியசாலைகளுக்கு அத்தியாவசிய மருந்து பொருட்கள் வழங்கி வைக்கப்படும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவர் மயில்வாக உதயகுமார்
தெரிவித்துள்ளார்.
எம்.கிருஸ்ணா