உலகளாவிய போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற கிளிநொச்சி மாணவி

0
367

இந்தியாவில் இடம்பெற்ற உலக கிண்ண மிக்ஸ் பொக்சிங் தெரிவுப் போட்டியில் கிக்பொக்சிங் பிரிவில் கிளிநொச்சி மத்தியமகா வித்தியாலய மாணவி ஜெபநேசன் விஜிதா வெள்ளிப்பதக்கம் வெற்றிக்கொண்டார்.

மேலும் இப் போட்டியில் தங்க, வெள்ளி பதக்கத்தினை பெற்ற வீர, வீராங்கனைகள் உலக மிக்ஸ் பொக்சிங் சங்கத்தினூடாக 3 மாத பயிற்சியை இந்தியாவில் இருந்து பெற்று எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள உலக கிண்ண போட்டியிலும் பங்கேற்கவுள்ளனர் .

இலங்கை மிக்ஸ் பொக்சிங் அமைப்பின் ஊடாக இந்தியாவில், இம் மாதம் 27ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டிகளில் கிளிநொச்சி, வவுனியா முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த வீரர்களால் கிக்பொக்சிங் போட்டியில் 4 தங்கப்தக்கமும் , 1 வெள்ளி பதக்கம் மல்யுத்தப் போட்டியில் 2 வெள்ளி பதக்கமும் பெற்று மொத்தமாக 7 பதங்கங்களை பெற்று வெற்றியை தமதாக்கி கொண்டுள்ளனர்.

ஆசிய மிக்ஸ் பொக்சிங் சங்கத்தின் தலைவரும் பயிற்றுனருமாகிய செல்வரத்தினம் நந்தகுமார் பயிற்றுவிப்பில் அவரது தலைமையில் குறித்த மாணவர்கள் போட்டிக்கு சென்று பதக்கங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காஷ்மிரில் இடம்பெறவுள்ள உலக கிண்ண மிக்ஸ் பொக்சிங் போட்டிக்கான தெரிவுப்போட்டியில் வவுனியா, கிளிநொச்சி மாணவி மற்றும் முல்லைத்தீவை சேர்ந்த வீர வீராங்கனைகள் உலக கிண்ண போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டு பாடசாலை, மாவட்டம் மற்றும் முழு இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.
குறித்த இப்போட்டியில் இலங்கை, இந்தியா, இத்தாலி போன்ற நாடுகள் பங்குபற்றியிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here