2025 ஆம் ஆண்டின் முற்பகுதியில் உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார்.
தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தாலும், வேட்பாளர்கள் இறப்பு, வெளியேறுதல், அரசியல் கட்சி மாறுதல்கள் போன்ற காரணங்களால் தேர்தல் தாமதமானதாகவும் தெரிவித்தார்.
பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகளுக்கான தேர்தலை நடாத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்தும் பாராளுமன்றத்தில் ஏனைய கட்சிகளுடன் கலந்தாலோசிப்பது குறித்தும் ஆலோசித்து வருவதாக அமைச்சர் ஹேரத் வலியுறுத்தினார்.