உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் திகதி இம்மாதத்தின் இறுதிவாரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க எதிர்பார்ப்பதாக தேசிய தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.
இன்று (08) இடம்பெற்ற தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களின் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவா விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஒவ்வொரு பிரிவுக்கும் தெரிவு செய்யப்படவுள்ள பிரதிநிதிகளின் எண்ணிக்கை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்றைய வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உள்ளூராட்சி மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் இரண்டையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளுக்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி தேர்தல் கடந்த ஆண்டு பெப்ரவரியில் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட்டது. இந்நிலையில், 2023ஆம் ஆண்டு பெப்ரவரி 20ஆம் திகதிக்குள் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.