கிராம உத்தியோகத்தர் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக வீட்டுத் தோட்டச் செய்கையை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
தட்டுப்பாடு நிலவும் உணவுப் பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்காக வீட்டுத் தோட்டச் செய்கையை மேற்கொள்ளும் ஆயிரக்கணக்கான கிராமங்களை உருவாக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
தற்போதைய சந்தர்ப்பத்தில் உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். கிராம உத்தியோகத்தர்கள், விவசாய அதிகாரிகள், பொருளாதார அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் இந்த வேலைத்திட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
விவசாயிகளுக்கு உரம் கிடைப்பதைத் தடுக்கும் வகையில் சிலர் செயற்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குற்றஞ்சாட்டியுள்ளார். பெரும்போக பயிர்ச் செய்கைக்குத் தேவையான உரத்தைக் கொள்வனவு செய்வதற்கு 110 மில்லியன் டொலர்கள் தேவை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.