உள்ளூராட்சி மன்றத் தேர்தல்  : நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு

0
103

மே மாதம் நடைபெறவுள்ள  உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களில் இருந்து அசல் பிறப்புச் சான்றிதழ் உள்ள வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்  (02) மீண்டும் பரிசீலிக்கப்பட்டபோது, ​​மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் மொஹமட் லாஃபர் தாஹிர் மற்றும் கே.பி. பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்களால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அசல் பிறப்புச் சான்றிதழ் உள்ள வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்வது தொடர்பாக நீதிமன்றத்தில் இணக்கம் எட்டப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here