உள்ளூராட்சி மன்றங்களுக்கான அடுத்த தேர்தலுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50 சதவீதத்தினால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள 8,000 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் எண்ணிக்கையினை 4,000ஆக குறைக்கவுள்ளதாக ஜனாதிபதி அதிரடி தீர்மானமொன்றை எடுத்துள்ளார்.
பிரதேச சபை, மாநகர சபை, நகர சபை ஆகிய சபைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8,000 லிருந்து 4,000 ஆகக் குறைப்பதுடன், மக்கள் சபை வேலைத்திட்டத்தை அமுல்படுத்த உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மேலும், விருப்புவாக்கு முறைமையானது மோசடிக்கு காரணம் எனவும், கலப்புத் தேர்தல் முறையை உடனடியாக அமுல்படுத்தி தேர்தல் செலவினத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.