பதுளை மாவட்டத்தில் உள்ள மலையக இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதற்கான விசேட தொழில் வழிகாட்டல் பயிற்சி கருத்தரங்கு தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஆலோசனை வழிகாட்டலின் கீழ் எதிர்வரும் 19ஆம் திகதி மு.ப.9.00மணிக்கு ஊவா மாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
இக்கருத்தரங்கிற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், இலங்கை ஹோட்டல் முகாமைத்துவ மற்றும் சுற்றுலா அதிகார சபை, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், தேசிய தொழிற்பயிற்சிகள் முகாமைத்துவ நிலையம் , ஊவா மாகாண சபை, தொழிநுடபக் கல்லூரி, கைத்தொழில் அமைச்சு, பொறியியல் கல்லூரி மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகிய அரச நிறுவனங்கள் அனுசரணை வழங்குகின்றன.
கருத்தரங்கில் கலந்து கொள்ள உள்ளோர் 076-0787141, 075-0461915,077-9270057, 077-2042674 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பசறை நிருபர்