எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, யாழ்ப்பாணம் ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் அருட்தந்தை ஜோசப் பத்திநாதர் ஜெபரத்தினத்தைச் சந்தித்தார்.
யாழ்ப்பாணம் ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் அருட்தந்தை ஜோசப் பத்திநாதர் ஜெபரத்தினம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று கடந்த (10) ஆம் திகதி யாழ் ஆயர் இல்லத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் அருட்தந்தை ஜோசப் பத்திநாதர் ஜெபரத்தினம் அவர்களிடம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் தமது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்காக ஆசி பெற்றுக் கொண்டதன் பின்னர், யாழ் மாவட்டத்தின் குறைபாடுகள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடினார்.
யுத்தத்தின் பின்னர் யாழ் மாவட்ட அபிவிருத்தியின் முன்னேற்றங்கள் குறித்து கேட்டறிந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தி சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை நடத்தி, இதன் பலன்களை வடக்கு மக்களுக்கு வழங்கி இந்தப் பிரதேசங்களை மேலும் அபிவிருத்தி செய்து தருவதாக யாழ்ப்பாணம் ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் அருட்தந்தை ஜோசப் பத்திநாதர் ஜெபரத்தினம் அவர்களிடம் தெரிவித்தார்.