கேகாலையில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கேகாலை கலுகல்ல மாவத்தையில் உள்ள சமகி ஜன பலவேகய (SJB) அலுவலகத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் பலியானவர் கேகாலை, ஹபுதுகல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த பெண் களுகல்லவில் உள்ள சமகி ஜன பலவேகய (SJB) அலுவலகத்தில் பணிபுரிபவர் என பொலிஸார் தெரவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் எதிர் கட்சி அலுவலகத்தில் உள்ள அறையில் இருந்து குறித்த பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளனர். குறித்த பெண் மூன்றாம் தரப்பினரால் சுடப்பட்டாரா அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்பது தொடர்பில் கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.