நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை கவனத்தில் கொண்டு நேற்று முதல் நூற்றுக்கு 10 வீதமான பஸ்களை மட்டுமே சேவையில் ஈடுபடுத்த தீர்மானித்ததாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
தனியார் பஸ் வண்டிகளுக்கு இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்கள் மூலம் எரிபொருள் வழங்கப்படுமென அறிவித்திருந்த போதும் அவ்வாறு எரிபொருள் கிடைப்பதில்லை என்றும் அதற்கான முறையான வேலைத் திட்டம் எதனையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னெடுக்கவில்லை என்றும் அதனால் பஸ் போக்குவரத்து சேவைகள் தற்போது சீர்குலைந்துள்ளதாகவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் இரண்டு மூன்று தினங்களில் தனியார் பஸ் சேவையை முற்றாக நிறுத்த நேரலாம் என்றும் சங்கம் தெரிவித்துள்ளது.