இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எனது தாய்வீடு ஆகவே என்னை வெட்டிப் போட்டாலும் இலங்கை தொழிலாளர் காங்கிஸை விட்டு போகமாட்டேன் என நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் வேலு யோகராஜ் தெரிவித்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற மாதாந்த சபை அமர்வின்போது ஊடகவியலா ளர்களால் கந்தப்பளை கானி தொடர்பாக எழுப்பபட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அமரர் ஆறுமுகன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் சக்திவேல் ஆகியோர் கந்தப்பளையில், குறித்த பகுதிக்கு விஜயமொன்றை மேற்கொண்ட கொங்கடிய தோட்ட கோயில் நிர்வாகம் குறித்த காணியினை அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்காக கோரியிருந்தது.
அதற்கமைய பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ஊடாக இந்த காணி குறித்த கோயில் நிர்வாகத்திற்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டப்போதிலும் அதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டமையினால் அதனை பொறுப்போற்க பிரதேசசபை மறுப்பு தெரிவித்தது.
அதன் பிரகாரம் தாம் அந்த காணியினை பலகோடி ருபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக ஊடகங்களின் ஊடாக பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தது. பணமோசடி செய்தேன் என்பது உண்மைக்கு புறம்பானது. இந்த காணிக்கான பணத்தினை எங்கு யாரிடம் பெற்றேன் என்பதை நீதிமன்ற ஊடாக நிருபித்து என்ன தண்டனை வழங்கினாலும் அதனை ஏற்க நான் தயாராக உள்ளேன் குறித்த கானி தற்பொழுது கானி சீர்திருத்த ஆனைகுழுவின் கீழ் உள்ளது.
தனிப்பட்ட ரீதியில் யார் இந்த காணியினை பணம் கொடுத்து பெற்றார்கள் என்பது எனக்கு தெரியாது மத்திய மாகாண ஆளுநர் மற்றும் ஆனையாளர் இணைந்து இதற்கான தீர்வீனை பெற்றுகொடுக்க வேண்டுமென அவர் தெரிவித்தார்.
எஸ் .சதீஸ் – நானுஓயா சந்ரு
20.06.2022. அன்று நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அடிப்படை கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.