என்.சி போதை பொருள் தயாரிப்பதற்கான திரவியத்துடன் அட்டனில் ஒருவர் கைது

0
178

நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள என்.சி போதை பொருள்  தயாரிப்பதற்கான திரவிய பொருட்கள் ஐந்து   கிலோவுடன் சந்தேகத்தின் பெயரில் ஒருவரை கைது செய்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை மாணவர்களை இலக்காக கொண்டு  விற்பனை செய்யும் நோக்கிலேயே என்.சி போதைப்பொருள்  தயாரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அட்டன் காமினிபுர பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட 50 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு அட்டன் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால்  இன்று 26-11-2024  கைது செய்யப்பட்டுள்ளார்.
அட்டன் நகரில் வர்த்தக நிலையமொன்றை நடத்தி வரும் குறித்த நபர்  இளைஞன் ஒருவருக்கு என்.சி போதை பொருளை  விற்பனை செய்த போதே கைது செய்யப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வீட்டை சோதணையிட்ட போது  அவரது  வீட்டில் என்.சீ. போதை பொருள் தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை தூள்  உள்ளிட்ட 5 கிலோ 750 கிராம்  திரவிய பொருட்களை   மீட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை அட்டன்  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எம்.கிருஸ்ணா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here