பண்டாரகம நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு அருகில் வரிசையில் நின்ற இரண்டு கெப் வாகனங்களின் இஞ்சினுக்கும் எரிபொருள் தாங்கிக்குமிடையில் எரிபொருள் வழியை பொய்யாக மாற்றி எண்ணையும் மாற்றி பெட்ரோல் பெறுவதற்காக வரிசையில் நின்ற இருவர் பண்டாரகம பொலிஸார் கைது செய்தனர்.
டீசலில் இயங்கும் இரண்டு வாகனங்களின் பதிவு இலக்கத் தகடுகள் போலியாக தயாரிக்கப்பட்டு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்ததுடன் பண்டாரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல்மாகாண புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த இரண்டு வாகனங்களையும் சோதனையிட்டபோது கண்டுபிடிப்பட்டுள்ளது.
இவற்றின் சாரதிகள் இருவரையும் கைது செய்து பொலிஸாரிடம் கொண்டு வந்த பின்னர் இரு வாகனங்களின் முன்பகுதி திறந்து மேலதிக சோதனை மேற்கொள்ளப்பட்டு இன்ஜின் பிரிவின் அருகில் டீசல் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் கான் தகடு வைத்து ஒட்டி இணைக்கப்பட்டுள்ளது.