இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் மற்றும் ஐ.ஓ.சி நிறுவனங்கள் எரிபொருட்களின் விலைகளை இன்று அதிகாலை முதல் அதிகரித்துள்ளன.
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு நேற்றைய தினம் கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, 337 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட 92 ரக ஒரு லீட்டர் பெட்ரோலின் புதிய விலை 420 ரூபாவாகும்.
373 ரூபாவாக காணப்பட்ட ஒரு லீட்டர் 95 ரக பெட்ரோலின் புதிய விலை 450 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
289 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு லீட்டர் ஒடோ டீசலின் புதிய விலை 400 ரூபாவாகும்.
ஒரு லீட்டர் ஒடோ டீசலின் விலை 111 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
329 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு லீட்டர் சுப்பர் டீசலின் புதிய விலையாக 445 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பழைய விலையில் எரிபொருள் விற்பனை செய்யப்படுவதன் ஊடாக, பெட்ரோலிய கூட்டுதாபனத்திற்கு நாளாந்தம் 600 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக பெட்ரோலிய கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது.