எரிபொருள் விலைத்திருத்ததில் மாற்றம் ஏற்படலாம் எனத் தெரியவருகிறது. அதற்கமைய, இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைவடையலாம் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிபொருள் விலை 14 நாட்களுக்கு ஒரு முறை திங்கட்கிழமைகளில் திருத்தம் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அண்மையில் டீசல் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.