ஆனையிறவு (அலிமன்கடை) உப்பளத்தில் ஒரு புதிய் உப்பு உற்பத்தி நிலையம் இன்று (மார்ச் 29) கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெட்டியின் தலைமையில் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது.
அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய இந்த தொழிற்சாலை, மணிக்கு ஐந்து மெட்ரிக டொன்; உப்பை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
இந்த வசதி ‘ராஜா லுனு’ என்று முத்திரை குத்தப்பட்ட அயடின் கலந்த உப்பை 1 கிலோ மற்றும் 400 கிராம் சில்லறை பொதிகளில் தயாரிக்கும், இது ஏப்ரல் 1 முதல் நுகர்வோருக்கு மலிவு விலையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.