ஐக்கிய மக்கள் சக்தியின் நல்லூர் தொகுதி அமைப்பாளரான அழகரத்தினம் கிருபா (வயது 43) இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.
அவர் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளராக போட்டியிட்டார்.
தேர்தல் பிரச்சார காலங்களில் அவர் திடீர் சுகவீனமடைந்து சுயநினைவற்ற நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.