‘ஐக்கிய மக்கள் சக்தி’ யின் அமைப்பாளா் கைது

0
386

ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர் சசங்க சம்பத் சஞ்சீவ, சந்தேகத்தின் பேரில் இன்று கைது செய்யப்பட்டு நாவலப்பிட்டி நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்

கடந்த 21 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளரான நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் தாதி ஒருவரை சந்தேக நபர் தாக்கிய சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேக நபரை நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்தனர்.

இதேவேளை, முறைப்பாட்டாளர் சந்தேக நபரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸில் சந்தேகநபர் செய்த முறைப்பாடு தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட்டதாக நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஹரேந்திர களுகம்பிட்டிய தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here