ஒத்தைக்கு ஒத்தையாக வந்து விவாதிக்க தயார் அமைச்சர் ஜீவன் சவால்

0
118
மலையக மக்கள் தொடர்பாக  விவாதிக்க ஏனைய  கட்சியில் உள்ள தலைமைகளை மொத்தமாக வர சொல்லுங்கள் என மக்களூடாக அழைப்பு விடுத்த
அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் தான் ஒத்தைக்கு ஒத்தையாக விவாதிக்க வருவதாக  சவால் விடுத்தார்.
நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி நடைபெற விருக்கின்றது. இந்த ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை ஆதரிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேண்டும் ரணில்! மீண்டும் ரணில்!’ எனும் தொணி பொருளில் அதன் தேர்தல் பிரச்சார கூட்டங்களை மலையகம் உள்ளிட்ட நாட்டில் ஏனைய பகுதிகளிலும் நடத்தி வருகிறது.
இதன் ஒரு தேர்தல் பிரச்சார கூட்டம்    (06) மாலை இராகலை மற்றும் கந்தப்பளை பிரதான நகரங்களில் இ.தொ.கா நடாத்தியது இதன் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நுவரெலியா பிரதேச சபையின் முன்னாள் சபை தலைவர் வேலு யோகராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்தப் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் பொதுச் செயலாளரும், நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மேலும் தனது உரையில் தெரிவித்ததாவது.
நாட்டில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இருந்த நிலைமை மாறுபட்டு இப்பொழுது மக்கள் சமூகமான  வாழ்வை வாழ்ந்து வருகின்றனர்.
 இதற்கு காரணமானவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  என்பதை யாரும் மறந்து விடாது நன்றி உணர்வுடன் இம்முறை அவரின் வெற்றி சின்னமான எரிவாயு சின்னத்துக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவரும் கடமையாகும்.
மலையக மக்களுக்கு வீடு மற்றும் சம்பளப் பிரச்சனை ஒரு மட்டுப்படுத்த தீர்வாக அமைந்து விடாது அதை தவிர்ந்து நமது மக்களுக்கு உரிமைகள் பல பெற வேண்டி உள்ளது.
இந்த சூழ்நிலையில் எதிர்காலத்தில் நமது மக்களுக்கான உரிமைகளை சரிவர பெற வேண்டும் என்றால் உரிமைகளை தரக்கூடிய சரியான தலைவர்   தலைவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே என்பதை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உணர்ந்து அவரின் வெற்றியை உறுதி செய்ய  தீர்மானித்துள்ளது.
நான் அரசியலுக்கு காலடி எடுத்து வைக்கும் போது தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள பிரச்சனை தீர்க்கப்பட வேண்டியதாக இருந்தது.
இந்த ஆயிரம் ரூபாய் சம்பளத்தை பெற்றுக் கொடுக்க எனக்கு அனுபவம் இல்லை என அந்த காலப்பகுதியில் பல விமர்சனம் செய்தார்கள் எனக்கு அனுபவம் இல்லாமலா அந்த ஆயிரம் ரூபாய் சம்பளத்தை நான் பெற்றுக் கொடுத்தேன் என அவர் கேள்வி எழுப்பினார்.
அதேபோல தற்பொழுது 1700 ரூபாய் சம்பளத்தை தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பல வழிகளை கையாண்டு வந்துள்ள நிலையில் எது எவ்வாறாக இருப்பினும் இந்த 1700 ரூபாய் சம்பளத்தை தொழிலாளர்களுக்கு பெற்றே தருவேன் என உறுதி அளிக்கிறேன் என்றார்.
அதேபோல தோட்டங்களை கிராமங்கள் ஆக்குவது காணி உரிமைகளை பெறுவது தொடர்பிலும் நாம் ஜனாதிபதியுடன் கோரிக்கைகளை முன்வைத்து இன்று அதற்கான தீர்வும் பெறட்டப்பட்டுள்ளது.
அப்படி என்றால் இன்றைய ஜனாதிபதி தொடர்ந்தும் அவரது பதவியில் இருக்க வேண்டும். ஆகையால் மக்கள் தனது ஜனநாயக வாக்குரிமையை சரியாக பாவித்து எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி கேஸ் சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களித்து ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க அவர்களை வெற்றியீட்ட வேண்டும்.
இன்று நமது மக்கள் மத்தியில் பலர் தேர்தல் காலத்தில் பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி நமது மக்களுடைய வாக்குகளை பெற முயல்கின்றனர். ஆனால் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் இன்று நன்கு சிந்திக்க கூடியவர்களாக இருக்கின்றனர்.
 நான் உங்களில் ஒருவனாக உங்களுக்காக சேவை செய்ய முன்வந்திருக்கும் இந்த நிலையில் நன்கு சிந்தித்து உங்கள் வாக்கினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை
 உங்கள் மத்தியில் முன்வைக்கின்றேன்.
இந்த நிலையில் நுவரெலியா மாவட்ட மக்கள் ரணில் விக்ரமசிங்க அவர்களை வெற்றி பெறச் செய்வார்கள் என்ற பூரண நம்பிக்கை எனக்கு உள்ளது. அதை செப்டம்பர் 21 ஆம் தேதி இடம்பெறும் தேர்தலில் உறுதி செய்து காட்ட வேண்டிய கடமை எனது மக்களான உங்களுக்கு இருக்கின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த காலப்பகுதியில் மலையக மக்கள் மீது அதீத அக்கறை கொண்டவர்களாக பலர் ஊடகங்களிலும்,மேடைகளிளும் அறிக்கைகளை விட்டு நன்மதிப்பை பெற முயற்சித்து வருகின்றார்கள். அவர்கள் மலையக மக்களுக்கு என்னதான் செய்திருக்கின்றார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அவ்வாறானவர்கள் மலையக மக்கள் மீது அக்கறை கொண்டு இருப்பவர்களானால் நான் ஒத்தைக்கு ஒத்தையாக விவாதத்துக்கு வருகிறேன் அவர்களை கூட்டமாக வரச் சொல்லுங்கள் விவாதிப்போம் என சவால் விடுப்பதாகவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதன் போது தெரிவித்தார்.
இந்தப் பிரச்சார கூட்டங்களில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதுபாண்டி ராமேஸ்வரன் உட்பட காங்கிரசின் தேசிய அமைப்பாளர் பி சக்திவேல் மற்றும் பிரதி தவிசாளர் சட்டத்தரணி பி ராஜதுரை நுவரெலியா மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் சட்டத்தரினையுமான சிவன் ஜோதி யோகராஜா ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் கல்யாணி சத்ரசிங்க மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஆ. விஜயகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஆ.ரமேஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here