ஹட்டன் நகரிலுள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு, ஒரு வாரத்துக்குப் பின்னர் இன்று பெட்ரோல் பௌசர் வந்தடைந்ததுடன், தற்போது எரிபொருள் விநியோக்கிக்கடும் நிலையில் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
வரிசையில் நின்று கொண்டிருந்தவர்களிடையே இந்த முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு சிலர் தங்களுக்கு நெருக்கியவர்களை வரிசையின் இடையில் புகுத்துவதற்கு முற்பட்டதன் காரணமாகவுமே இங்கு பதற்ற நிலை ஏற்பட்டள்ளதாகவும் தெரிய வருகிறது.