ஒரு வாக்காளருக்கு அதிகபட்சமாக 109 ரூபாய் செலவழிக்க முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக ஒரு வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையை குறிப்பிடும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகையை விட அதிகமாக செலவு செய்வது சட்டவிரோத செயல் என்றும் இதன் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மீறும் வேட்பாளருக்கு உரிய தேர்தல் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க முடியும் என்றும் ஆணையம் சமீபத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.