ஓய்வுநிலை உதவிகல்விப்பணிப்பாளர் பீ.மரியதாஸின் நூல் வெளியீட்டு விழா அட்டனில்

0
146

ஓய்வுநிலை உதவிகல்விப்பணிப்பாளர் பீ.மரியதாஸ் எழுதிய ‘மலையகம்: இங்கிருந்து எங்கே?’ எனும் நூல் வெளியீட்டுவிழா இன்று 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02.00 மணி க்கு அட்டன் சமூக நலநிறுவனம் நிறுவனத்தில் கல்விவெளியீட்டுத் திணைக்களம் ஓய்வுநிலைஆணையாளர் நாயகம்இ கவிஞர் சு. முரளிதரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

யார் இந்த பீ.மரியதாஸ்
1960களில் ஏற்பட்ட மலையக சமூக எழுச்சியின் தாக்கத்தால் உருவான மலையக எழுத்தாளரான பீட்டர் மரியதாஸ் , ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியிலிருந்து 1965ம் ஆண்டு இலங்கை பல்கலைகழகம் சென்ற மூன்று பேரை கொண்ட முதல் தொகுதி மாணவர்களில் ஒருவராவார்.

இவர் மாணவப் பருவத்திலேயே பேச்சுஇகட்டுரைஎழுதுதல்  கவிதை புனைதல் போன்றவற்றில் திறமையை வெளிப்படுத்தியவராக திகழ்ந்தார்.இவரும் நானும் 1962 ல் எச்.எஸ்.சி (u .S.C.) வகுப்பில் ஒன்றாககல்வி கற்க ஆரம்பித்து, இலங்கை பல்கலைகழகத்தில் (1965 -1969) ஒன்றாக பயின்று, பின்னர்1970களின் ஆரம்பம் தொட்டு ஒய்வுபெறும்வரை அவர் ஆசிரியராகவும் நான் திட்டமிடல் அமைச்சிலும்பணிபரிந்தோம்.

ஐம்பது ஆண்டுகளாக நாங்கள் இருவரும்தொடர்பில் இருந்ததன் விளைவாகநான் இவரது அனைத்து ஈடுபாடுகள் பற்றியும் அறிந்தவனாகஇருந்தேன்.பாடசாலை காலத்திலேயே எழுத ஆரம்பித்த இவரது படைப்புகள் பல புனைப்பெயர்க்ளில் வெளிவந்துள்ளன. இவரது முழுப்பெயரான பீட்டர் மரியதாஸ் கேபிரியல் (Peter Mariadas Gabriel) என்பதை சுருக்கி ‘பி.எம்.ஜி’ என்ற பெயரில் பலகட்டுரைகள் வீரகேசரி, தினகரன் பத்திரிகைகளிலும் மலைமுரசு போன்ற சிற்றிதழ்களிலும் வெளிவந்துள்ளன.

1960களில் ஹைலன்ட்ஸ் கல்லூரியின் செந்தமிழ் கழகம் மறைந்த ஆசிரியர்கள் சிவலிங்கம்இதிருச்செந்தூரன் ஆகியோர் தலைமையில் மிக முனைப்பாக செயற்பட்டது. பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள் மாணவர்கள் மத்தியில் சமூக, மற்றும் இலக்கிய ஈடுபாட்டினை ஊக்குவித்த பின்னணியில் உருவானவர்களே புகழ்பூத்த மலையக எழுத்தாளர்களான சாரல்நாடன், மு.சிவலிங்கம் ஆகியோர். இந்த குழாமிலே இணைந்த ஒருவரே மரியதாஸ் ஆவார்.

நூல் பற்றி சிறு குறிப்பு

இந்த நூல் 18 கட்டுரைகளின் தொகுப்பாகும்.ஒன்றைத் தவிரஏனையவை அனைத்தும் வீரகேசரி பத்திரிகையில் 2016-2024 காலப்பகுதியில் வெளிவந்தவையாகும்.11 கட்டுரைகள் 2023ஆம் ஆண்டிலும், 3 கட்டுரைகள் 2022இலும், 2 கட்டுரைகள்2024 இலும்இஏனைய இரண்டும் 2016 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் தலா ஒன்றாகவும்வெளிவந்துள்ளன.

2022ஆம் ஆண்டு இலங்கை அரசியலில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட ஆண்டாகும். இத்தகைய அரசியல்கொந்தளிப்பை தொடர்ந்து வெளிவரும் எழுத்துக்கள் அக்கால சூழ்நிலையை பிரதிபலிப்பனவாக அமைவது தவிர்க்க முடியாததாகும்.

எதிர்பார்த்தவாறு இந்த நூலின் தலைப்பை சுமந்திருக்கும் கட்டுரை 2022ன் ‘அரகலய’ போராட்டத்தை மையப்படுத்தியதாகும். இக்கட்டுரைகளை மேலோட்டமாக பார்க்கையில், நான்கு கட்டுரைகள் இலக்கியம் சார்ந்தவை, மலையக வரலாறு சார்ந்தவைநான்கு, பொருளாதாரம் மற்றும்அரசியல் துறைகள் ஒவ்வொன்றிலும் மும்மூன்று மற்றும் சமூகம் சார்ந்தவை இரண்டுமாக அமைந்துள்ளன. இக்கட்டுரைகளில் காணப்படும் பொதுவான பண்பு அவை பல அரிய வரலாற்று தகவல்கள் ஆங்கில மூல நூல்களிலிருந்து பெறப்பட்டு சான்றாதாரங்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளமையாகும்.

மார்க்ஸிய பார்வையில், விமர்சன ரீதியில் இவை அமைந்துள்ளமை குறிப்பிடக்கூடியவொன்றாகும்.

நூல் பட்டியலில் 54 ஆங்கில நூல்களுக்கு மேலாக ஆதாரங்களாக காட்டப்பட்டுள்ளன. பல புதிய நூல்கள் இவரது ஆய்வுத் தேடலில் உள்ளடக்கப்பட்டுள்ளமை சிறப்பான ஒன்றாகும்

ஓய்வு நிலை அரச அதிகாரி எம். வாமதேவன் எழுதிய கட்டுரையின் சுருக்க வடிவமே இங்கு தரப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here