மருத்துவர்கள் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சட்ட மாஅதிபருக்கு பணிப்புரை கிடைத்துள்ளதாகவும் அடுத்த வாரம் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் அமைச்சின் செயலாளர் அலோக்க பண்டார தெரிவித்துள்ளார்.
வைத்தியர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் மற்றும் சேவையின் தேவைகளை கருத்திற்கொண்டு, அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டார்.