சிறுபான்மை கட்சித் தலைவர்களை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார்.
இதன் போது ஜனாதிபதி தேர்தல் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டதாக, ஆளுநரின் ஊடகப் பிரிவு வெளியிட்டள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இக்கலந்துரையாடலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், சாணக்கியன் இராசமாணிக்கம், சிவஞானம் சிறீதரன், ஆகியோர் கலந்து கொண்டனர்.