கணவரின் பெட்ரோலை அதிகாரிக்கு கொடுத்த மனைவி தாக்கப்பட்டு வைத்தியாசலையில்

0
676

கணவன் சேமித்து வைத்த பெட்ரோலை அலுவலக அதிகாரிக்கு மனைவி கொடுத்தமையால் கணவரின் தாக்குதலுக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று யாழ். வலிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தாக்குதலுக்கு உள்ளான மனைவியின் கணவர் இரவு பகலாக நீண்ட வரிசையில் காத்திருந்து 05 லிற்றர் பெட்ரோலினை வாங்கி வீட்டில் வைத்துள்ளார். இந்நிலையில் மனைவி அலுவலகத்தில் வேலை செய்யும் அதிகாரியை வீட்டிற்கு வரவழைத்து கணவனுக்கு தெரியாமல் சேமித்து வைத்திருந்த பெட்ரோலினை அதிகாரிக்கு கொடுத்துள்ளார்.

இதனையடுத்து கணவர் வீட்டிற்கு வந்து பெட்ரோலை தேடியபோது கிடைக்கவில்லை. இது தொடர்பில் மனைவியிடம் விசாரிக்கும்போது மனைவி உண்மையை சொல்லியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் மனைவியின் தலையில் கட்டையால் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து அயலவர்கள் மனைவியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறியக்கூடியதாக உள்ளது. கணவரும் யாழில் உள்ள அலுவலகமொனறில் உத்தியோகத்தராக பணியாற்றுவதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here