கந்தப்பளை தோட்டத்தில் பத்து வயதுடைய சிறுவன் மாயம்

0
503

கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திரகாந்தி (எஸ்கடேல்) தோட்டத்தில் பத்து வயதுடைய சிறுவன் காணாமற்போயுள்ளதாக இன்று காலை கந்தப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த தோட்டப் பாடசாலையில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் தங்கராஜ் ஹரீஸ்காந்  என்ற மாணவன் இவ்வாறு காணாமற் போயுள்ளார்.

ஹப்புதலை தங்கமலை (கே) பிரிவு தோட்டத்தை சேர்ந்த இந்த மாணவன் எஸ்கடேல் தோட்டத்தில் தனது ஆச்சியின் வீட்டில் தங்கியிருந்து அதே தோட்ட பாடசாலையில் கல்வி பயின்று வருகிறார்.

இவர் தனது ஆச்சியின் வீட்டிலிருந்து நேற்று காலை வழமை போல பாடசாலைக்கு சென்ற இந்த மாணவன் மாலை வரை வீடு திரும்பாத நிலையில்  மாணவனை தேடும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

இருப்பினும் மாணவன் இன்று காலை வரை வீடு திரும்பாத நிலையில் கந்தப்பளை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.

இந்த நிலையில் முறைப்பாட்டை ஏற்ற பொலிஸார் சிறுவனை தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ளதுடன், கந்தப்பளை நகரின் கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டிவி பதிவுகளையும் பரிசோதித்துள்ளனர்.

இதன் போது காணாமற் போனதாக சொல்லப்படும் மாணவன் பாடசாலை சீருடையில் நேற்று மாலை 3.41 மணியலவில் கந்தப்பளையிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி நடந்து செல்கின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக கந்தப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் இம் மாணவன் தொடர்பில் தகவல் தெரிந்தால் மாணவனின் தந்தை தங்கராஜ் 071 962 2256 என்ற இலக்கத்திற்கும் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கும் அறிவிக்குமாறு கந்தப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரமேஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here