கபே ஏற்பாட்டில் பெண்களின் டிஜிட்டல் அறிவை மேம்படுத்தும் பயிற்சிப்பட்டறை

0
283

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே)  தேர்தல் கண்காணிப்பு நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட, “ஜனனி “டிஜிட்டல் மேம்பாட்டு திட்டத்தின்   பயிற்சிப்பட்டறை, இன்று சனிக்கிழமை (3) ம் திகதி ஏறாவூரில் நடைபெற்றது.

ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற இப்பயிற்சிப்பட்டறையில் உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், மட்டக்களப்பு மாவட்ட பெண் அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் பெண் சிவில் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் சிறப்பு பேச்சாளராக ஐரெஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க கலந்து கொண்டதுடன் வளவாளர்களாக கலாவர்ஷி கனகரட்ணம்  மற்றும் நிஸ்ஸங்க்க ஹரேந்திர ஆகியோர் கலந்து சிறப்பித்தார்.

கபே நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் திரு மனாஸ் மக்கீன் தலைமைத்துவத்தின் கீழ், இந்நிகழ்வை மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கந்தவேல் காண்டிபன் மற்றும்  ஜனனி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜே.எவ். காமிலா பேகம் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்திருந்தனர்.

இப் பயிற்சிப்பட்டறையில் இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பெண்கள் . சிறுமிகளின் தொழில்நுட்பப் பாதுகாப்பு நடவடிக்கைகள், தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் வழிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பற்றி விளக்கமளிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here