இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது சட்டவிரோத கொலைகள், சித்திரவதைகள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நான்கு பேர் மீது இங்கிலாந்து இன்று (24) தடை விதித்துள்ளது.
இந்தக் குழுவில் முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணகொட, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய, முன்னர் விடுதலைப் புலிகள் அமைப்பில் கடமையாற்றிய கருணா அம்மான் அடங்குகின்றனர்
இதன்படி, குறித்த குழுவினர் இங்கிலாந்துக்குள் நுழைய தடை விதிக்கப்படுவதுடன், அவர்களது சொத்துக்களையும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.