கேரள மாநிலம் கோழிக்கோடு கடற்கரையில் 50 அடி நீளமுள்ள நீல நிற திமிங்கலம் நேற்று (30) கரை ஒதுங்கியுள்ளதாக தெரியவருகிறது. கரை ஒதுங்கிய திமிங்கலத்தைப் பார்ப்பதற்கு பெருமளவில் மக்கள் பெருமளவு கூடியுள்ளதாகவும் அறியக்கூடியதாக உள்ளது.

திமிங்கலம் அழுகும் நிலையில் இருப்பதால், இறந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கலாம் எனவும் அறியக்கூடியதாக உள்ளதுடன், நீல திமிங்கலம் இறந்தது எப்படி? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து குறித்த இடத்திலேயே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு, அதன்பிறகு ராட்சத குழி தோண்டி புதைப்பது என அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். திமிங்கிலத்தின் உடல் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.