கல்முனையில் இருந்து உகந்தை மற்றும் கதிர்காமத்திற்கான பஸ் சேவை எதிர்வரும் 28 ஆம் தேதி ஆரம்பமாகின்றது என்று கல்முனை போக்குவரத்து சாலையின் அத்தியசகர் பி.ஜௌபர் தெரிவித்தார்.
கல்முனையில் இருந்து கதிர்காமத்திற்கான ஒரு வழி பாதை பயணத்திற்கான கட்டணம் 950 ரூபாய். முற்பதிவுக்கு 35 ரூபாய்.
காலையிலே ஆறு மணி ஏழு மணிக்கு இரண்டு பஸ்கள் புறப்படுகின்றன.
அதேபோன்று கதிர்காமத்தில் இருந்து காலை 8 மணிக்கு ஒரு பஸ் புறப்படுகின்றது.
இதேவேளை கல்முனையில் இருந்து உகந்தை மலை முருகன் ஆலயத்திற்கான பஸ் சேவையும் ஆரம்பமாகவிருக்கின்றது அதற்கான பஸ் கட்டணம் 650 ரூபாய் .முற்பதிவுக்கு 35 ரூபாய்.
40 பேர் சேர்ந்து தனியாக ஒரு பஸ் பெற்று கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார். அடியார்களின் தொகை தேவைக்கேற்ப பஸ் சேவைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கதிர்காமத்தில் போக்குவரத்து சபைக்கான முன்பதிவு காரியாலயம் அடுத்த வாரம் இருந்து இயங்க தொடங்கும் .
( வி.ரி. சகாதேவராஜா)