கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வரலாற்று நிகழ்வுகளை தாங்கிய சிற்ப திரை நீக்க விழா சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வானது வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ரங்க சந்திரசேன தலைமையில் புதன்கிழமை (15) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் ஆகிய டாக்டர் இரா.முரளீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இந்த வரலாற்று நிகழ்வுகளை தாங்கிய சிற்பத்தின் நிர்மாணத்திற்கான அனுசரனையை கல்முனை சரவணாஸ் ஜுவலறி உரிமையாளர் க.பிரகலதன் வழங்கி இருந்தார்.
இந்நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், மற்றும் வைத்தியசாலையின் ஊழியர்கள், வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
பாறுக் ஷிஹான்