“கல்விக்குக் கைகொடுப்போம்” என்ற வேலைத்திட்டத்தின் கீழ்
ஹாஷிம் உமர் பௌண்டேசன் வறிய மாணவர்களுக்கு
மடி கணனி வழங்கும் வேலைத்திட்டமொன்றை
முன்னெடுக்கவுள்ளது.
ஹாஷிம் உமர் பௌண்டேசனின் ஸ்தாபகரும் இலங்கை
ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஆலோசகருமான புரவலர்
ஹாஷிம் உமரின் சிந்தனையில் உதித்த “கல்விக்கு கைகொடுப்போம்”என்ற சிந்தனைக்கு அமைவாகவே மேற்குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
ஹாஷிம் உமர் பௌண்டேசன் பல்வேறு சமூக சமய நலத்திட்டங்களை பலவருட காலமாக முன்னெடுத்து வருகின்ற
நிலையிலேயே குறித்த திட்டத்தையும் முன்னெடுப்பதற்கு
தீர்மானித்துள்ளது.
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்தில் கல்வி பயிலும்
மிகவும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் மாணவர்கள் மேற்படி திட்டத்துக்குள் உள்ளீர்க்கப்படவுள்ளனர்.
இந்நிலையில் ஹாஷிம் உமர் பௌண்டேசனுக்கு
கிடைக்கும் விண்ணப்பப்படிவங்கள் ஐவரடங்கிய நடுவர்கள் குழுவினரால் பரிசீலிக்கப்பட்டு அவர்களின் சிபார்சுக்கு அமைவாக விநியோகிக்கப்படும் என புரவலர் ஹாஷிம் உமர் தெரிவித்துள்ளார்.