நத்தார் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, உணவு மற்றும் பானங்களை விற்பனை செய்யும் நிலையங்களை பரிசோதிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக சுமார் 1,750 பேர் கொண்ட பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.
அதிகளவான மக்கள் புலங்கும் பண்டிகைக் காலத்தில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் உள்ளிட்டவற்றை சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக உபுல் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.