வீடொன்றிலிருந்து தந்தையும் மகளும் உயிரிழந்த நிலையில் நேற்றிரவு திங்கட்கிழமை இரவு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். களுத்துறை தெற்கு – ஹினட்டியன்கல பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றறுள்ளது. வீட்டிலிருந்த தாயாரினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
69 வயதான தந்தையும் 33 வயதான அவரது மகளுமே சடலங்களாக, தந்தை வீட்டிலிருந்த கதிரையொன்றிலும் மகள் வீட்டு வரவேற்பறையிலும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
சடலங்கள் களுத்துறை – நாகொட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.