இம் மாதம் 19 ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 20 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு பால்குடபவனி.நடைப்பெற்று எம் பெருமானுக்கு 1009 சகஸ்ர தல சங்காபிஷேகம். நடைப்பெற்று மகேஸ்வர பூஜையுடன் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். மாலை 6.30 மணிக்கு மாம்பழ திருவிழா நடைபெறும்.
21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிக்கு நித்திய பூஜை விஷேட வசந்த மண்டப பூஜையுடன் பக்தர்கள் புடைசூழ மங்கள வாத்தியங்கள் முழங்க பேண்ட் வாத்திய கலைஞர்களுடன் நடன கலைஞர்களின் நடன நிகழ்வுகளுடன் தேர் பவனி களுத்துறை நகரம் சென்று ஆலயத்தை வந்தடையும்.
22 ஆம் திகதி சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு தீர்த்தோற்சவம் கொடியிறக்கம் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.மாலை 4.30 மணிக்கு திருக்கல்யாண வைபவம் திருப்பூங்காவனம். திருபொன்னூஞ்சல் நடைப்பெற்று அடியார்களுக்கு இரா போஜனம் வழங்கப்படும்.
23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு விஷேட பூஜைகளுடன் வைரவர் பெருமானுக்கு வைரவர் மடை பூஜைகள் நடைப்பெற்று விழா இனிதே நிறைவு பெறும்.உற்சவ காலங்களில் அனைத்து அடியார்களும் ஆலயத்திற்கு வருகை தந்து எம் பெருமானின் அருட்கடாஷத்தை பெற்றுக் கொள்ளுமாறு அனைத்து அடியார்களையும் அன்புடன் அழைக்கின்றார்கள்
ஆலய பரிபாலன சபையினர்கள்.