காசல்ரீ நீர்த்தேக்கத்திலிருந்து இன்று காலை சடலமொன்று மீடகப்பட்டுள்ளது. அட்டன், கார்பெக்ஸ் பிரிவைச்சேர்ந்த 75 வயது மதிக்கத்தக்க திருமணமாகாத வயோதிப்ப் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் நேற்று மாலை காணாமல் போன நிலையில் , அவரது உறவினர்கள் இரவு வரை தேடியும் எவ்வித தகவலும் கிடைக்கப்பெறாத நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஆறுமுகம் கமலம் என்ற அப்பெண்ணின் சடலம் காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு அண்டியுள்ள சன சமூக நிலை கட்டித் தொகுதிக்கு அருகிலேயே மீட்கப் பட்டுள்ளது. சடலம் பிரதேச பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உள்ள நிலையில் அட்டன் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துச்துள்ளர்