காணாமல் போன இருபத்தொரு வயது இளைஞன் விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்பு

0
224

தாக்கப்பட்டு பத்து நாட்களாக காணாமல் போன இருபத்தொரு வயது இளைஞனின் சடலம் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கம்பளை கஹடபிட்டியவில் மொத்த வியாபார நிலையத்தில் பணியாற்றிய நிலையில் காணாமல் போன இருபத்தொரு வயதுடைய இளைஞன் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கம்பளை, கஹட்டா பிட்டிய, பகுதியைச் சேர்ந்த மொஹமட் ஹசன் ராஷிக் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக குறித் கடையில் பணிபுரிந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அதே பகுதியில் இந்த மொத்த வியாபாரிக்கு சொந்தமான களஞ்சியசாலை ஒன்றும் உள்ளதாகவும், அந்த மொத்த வியாபாரியிடம் ஏதோ மோசடி செய்ததாக கூறி உயிரிழந்த இளைஞன் தாக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.

கடையின் உரிமையாளரும் அவரது மகனும் பலருடன் சேர்ந்து தாக்குதலில் ஈடுபட்டதுடன் தாக்குதல் நடத்தப்பட்ட நாளிலிருந்து இளைஞன் காணாமல் போயிருந்த நிலையில், வீடு வராத மகன் குறித்து கடந்த 22ஆம் திகதி கடையில் தனது மகன் தாக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் தனது மகனை காணவில்லை எனவும் தாயார் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இரு மகன்கள் மற்றும் உறவினர்கள் அவரை தேடியும் எந்த தகவலும் இல்லாததால் கடந்த 25ஆம் திகதி மீண்டும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
விக்டோரியா நீர்தேக்கத்தில் இரு சடலம் இருப்பதாக தகவல் அறிந்த பின்னர், அங்கு சென்று பார்த்த போது தனது மகனே சடலமாக கிடந்துள்ளதாகவும், கம்பளையிலிருந்து விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு 40 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் உள்ளது. மகனுக்கு அங்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here