காணாமல் போன பெண் மலைப்பாம்பின் வயிற்றுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசியாவில் (Indonesia) ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த கோர சம்பவம் இந்தோனேசியா – தென் சுலானீஸ் மாகாணத்தில் உள்ள காலேம்பாங் கிராமத்தில் (09) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இந்தோனேசியா – காலேம்பாங் கிராமத்தில் 45 வயதான பரிதா என்ற பெண் கணவர் மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன் பரிதா திடீரென காணாமல் போன நிலையில் அவரை கணவரும் கிராமத்தினரும் தீவிரமாகத் தேடி வந்தனர்.
பரிதாவின் உடைகளைக் கிராமத்தின் அருகே அவரது கணவர் கண்டுபிடித்த நிலையில், தேடுதலைத் தீவிரப்படுத்திய கிராமத்தினர் 5 மீட்டர் நீளமுடைய 16 அடி பைத்தான் வகை மலைப்பாம்பை அப்பகுதியில் பார்த்துள்ளனர்.
சந்தேகமடைந்த அவர்கள் மலைப்பாம்பின் வயிற்றைக் கிழித்து பார்த்தபொழுது உள்ளே ஆடைகளுடன் பரிதாவின் உடல் முழுதாக ஜீரணிக்கப்படாமல் மீட்கப்பட்டுள்ளது.