வட்டவளை, அக்கரவத்தை தோட்டத்தில் கடந்த 3 ஆம் திகதி காணாமல் போன நிலையில், தேடப்பட்டு வந்த இரண்டு பிள்ளைகளின் தாய் , இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அக்கரவத்தை தோட்டத்தைச் சேர்ந்த 54 வயதுடைய பி.விஜயலெச்சுமி என்ற தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நோட்டன் ஆற்றுடன் இணையும் அக்கரவத்தை ஆற்றுப்பகுதியில் இருந்தே இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது வீட்டிலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீற்றர் தூரத்தில் உள்ள ஆற்றுப்பகுதியிலிருந்தே மீட்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்குச் கொண்டு செல்லப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.