காருக்குள் விளையாடிக் கொண்டிருந்த 4 சிறுவர்களில் இருவர் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தின் மொரதாபாத்தில் உள்ள முந்தா பாண்டே பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்டர்பில் தெரியவருவதாவது,
4 சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர். 4 முதல் 7 வயதிற்குட்பட்ட அனைவரும் காருக்குள் அமர்ந்து விளையாடியபோது காரின் கதவு தானாகவே மூடிக்கொணண்டுள்ளது. அருகில் யாரும் இல்லாத நிலையில் காருக்குள் சிக்கியவர்கள் மூச்சித்திணறி மயங்கியுள்ளனர்.
பின்னர் காருக்குள் மயக்க நிலையில் இருந்த சிறுவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அதில் இரண்டு பேர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்ற இருவரும் தீவிர சிகிச்சையில் இருப்பதாக தெரியவருவதுடன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.