காரைதீவில் ஒரு மீன் ஒரு கோடி ரூபாய்

0
372
காரைதீவில் கோடி ரூபாய் பெறுமதியானது நீல கிளவல்லா ( தூணா…) இன  மீன் இன்று (20) திங்கட்கிழமை பிடிபட்டுள்ளது.
காரைதீவு பகுதியில் இருந்து ஆழ்கடலில்  மீன்பிடிக்கச் சென்ற  மீனவர்களின்  தூண்டிலில்  சுமார் கோடிக்கணக்கான பெறுமதியானது என நம்பப்படும் 49 கிலோ எடையுள்ள நீல தூணா அல்லது உள்ளுரில் நீல ஹெலவள்ளா(ஹென்டா)  என அழைக்கப்படும் பாரிய மீன்  சிக்கியுள்ளது.
பெரிய கண் மற்றும் நீல நிற  வர்ணங்களை கொண்டுள்ள குறித்த மீன் அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் மீனவரின் தூண்டிலில் பிடிக்கப்பட்டுள்ளதுடன்  49 கிலோ நிறையுடைய குறித்த மீனை விற்பதற்கான முயற்சியில் மீனவர்கள் இறங்கியுள்ளனர்.
ஒரு கிலோ தூணா மீன் 24 லட்சம் ருபா கணிப்பிடப்பிடப்படக்கூடியது.
ஒரு துண்டு இவ் வகை மீனை சாப்பிட்டால் பத்து வருடங்கள் முலதிகமாக வாழக்கூடிய சத்து கிடைக்கும் என நம்பப்படுகிறது.
ஆனால் இங்கு பிடிபட்ட மீன் முறைப்படி இனங்கண்டு முறையாக பேணப்படாமையினால் கிலோ 3 லட்சம் ரூபாய் பேசப்படுகிறது.
கடும் போராட்டத்திற்கு மத்தியில் பிடிக்கப்பட்ட குறித்த மீன் இனங்கள் 7 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும்   யாவும் பெறுமதி மிக்கதாக உள்ளதாகவும் பாரிய மீன்களை கொள்வனவு செய்கின்ற நிருவனங்களே இவ்வாறான மீன்களை அதிக விலை கொடுத்து வாங்குவதாகவும்  மீனவர்கள் குறிப்பிட்டனர்..
( வி.ரி.சகாதேவராஜா)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here