லோட்டஸ் வீதியில் உள்ள ஜனாதிபதி செயலகம், நிதி அமைச்சு, திறைசேரி ஆகியவற்றின் நுழைவாயில்களை மறித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் 21 பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இன்று முற்பகல் கைது செய்யப்பட்ட பௌத்த தேரர் ஒருவர், பெண்கள் 4 பேர், 16 ஆண்கள் உள்ளிட்ட 21 பேரும், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்களை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதற்கமைய, தலா ரூ. 5 இலட்சம் கொண்ட சரீரப்பிணையில் அவர்களை விடுவிக்குமாறு, கோட்டை பிரதான நீதவான் திலிண கமகே உத்தரவிட்டார்.
இதேவேளை, சந்தேகநபர்களை பிணையில் விடுவித்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்ற காரணத்தினால் பிணை வழங்க வேண்டாம் என பொலிஸார் விடுத்த கோரிக்கையை நிராகரித்த நீதவான், சந்தேகநபர்கள் 21 பேரையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.
சந்தேகநபர்கள் தங்களுடைய வதிவிடச் சான்றிதழ்களை பின்னர் சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.