புதுவருடப் பிறப்பு மற்றும் ‘கிளீன் ஸ்ரீ லங்கா’ கடமை ஆரம்ப நிகழ்வு கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் இஷட்.ஏ.எம்.பைஷல் தலைமையில் மாகாண வளாகத்தில் (01) இடம்பெற்றது.
இந்த ‘கிளீன் ஸ்ரீலங்கா’ முதல் நாள் ஆரம்பம் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சு, சுகாதார அமைச்சு, சுதேச மருத்துவ திணைக்களம், சட்டப்பிரிவு, சமூக சேவைகள் திணைக்களம், சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு திணைக்களம், கூட்டுறவுத் திணைக்களம், சுற்றுலாத்துறை பணியகம், தேசிய கணக்காய்வுத் திணைக்களம் (உள்ளகப்பிரிவு) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவு போன்ற அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ என்ற திட்டத்துடன் இணைக்கப்பட்ட உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
2025 ஆம் ஆண்டுக்கான ஆரம்ப நிகழ்வை கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் இஷட்.ஏ.எம்.பைஷல் தேசியக் கொடியையும், சுகாதார அமைச்சின் செயலாளர் எல்.பி.மதநாயக்க மாகாண கொடியையும் ஏற்றி வைக்கப்பட்ட பின்னர் சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு, நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற ‘கிளீன் ஸ்ரீலங்கா’ தேசிய வேலைத்திட்ட நிகழ்வு நேரலை மூலம் ஒளிபரப்பப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
அபு அலா, மட்டு.துஷாரா