மழை நீர் கசிந்து கொண்டு இருக்கும் போது மாணவர்கள் பரீட்சை எழுதுவதானது அவர்களின் மனித உரிமைகளை மீறும் செயலாகும் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம் வெளியிட்டுள்ளது.
பலத்த மழைக்கு நடுவே வகுப்பறையில் மாணவர்கள் குழுவாக குடை பிடித்தபடி பரீட்சை எழுத அமர்ந்திருக்கும் ஒளிப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இந்த முறை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் குழுவொன்று இவ்வாறான அநாதரவான நிலையில் அமர்ந்துள்ளதாக சமூக வலைத்தளங்கள் தொடர்பான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கட்டடத்தில் இருந்து மழை நீர் கசிவு என்பது பரீட்சை எழுதும் மாணவர்களின் மனித உரிமைகளை மீறும் செயலாகும் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) தெரிவித்துள்ளது.