குப்பைகளுக்கும் அசுத்தத்திற்கும் பேசப்படும் நகரமாக அட்டன் இருக்கின்றதா?

0
219

“நுவரெலியா மாவட்டத்தின் பிரதான நகரம் குப்பைகளின் பிரதான நகரமாக இன்று ஹட்டன் உள்ளது..” நுவரெலியா மாவட்டத்தில் 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் என்ன பயன்..? காலம் காலமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் பிரதேசசபை உறுப்பினர்கள் நகரசபை உறுப்பினர்கள் இருந்து என்ன பயன்..? ஹட்டன் நகரத்திற்கு விடிவு வரவில்லையே.

உண்மையில் நுவரெலியா மாவட்டத்தில் பிரதான நகரம் ஹட்டன் எல்லோராலும் பேசப்படும் நகரம் ஆனால், குப்பைகளுக்கும் அசுத்தத்திற்கும் பேசப்படும் நகரமாக இன்று மாறி உள்ளது.

எந்த விதமான அடிப்படை வசதியும் இல்லை…உண்மையில் இது வேதனைக்குறிய விடையம். நுவரெலியா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் உள்நாட்டு சுறுலா பயணிகள் அதிகமானோர் முதலில் ஹட்டன் நகரம் வந்து தான் செல்கிறார்கள். அத்தோடு ஸ்ரீ பாத புனித யாத்திரை பயணிப்போர் கூட ஹட்டன் வந்தே செல்கிறார்கள்.

நுவரெலியா வரும் ரயில் பயணிகளும் கூட ஹட்டன் நகரத்திற்கே முதலில் வருகிறார்கள். ஆனால், வருவோர் பலர் என்னிடமே சொல்லி இருக்கிறார்கள் இனி ஹட்டன் வரமாட்டோம் மாற்று வழியாக தான் நுவரெலியா போவோம் என்று அந்த அளவிற்கு அசுத்தமான நகரமாம் ஹட்டன்.  சுத்தம் இன்மை எங்கு பார்த்தாலும் அசுத்தத்தையே பார்க்க முடிகிறது சுகாதார பாதுகாப்பு ஹட்டனில் இல்லை என்று சொல்கிறார்கள்.

அது உண்மை தான் ஹட்டன் நகரம் அசுத்தம் நிறைந்த நகரமாக தான் உள்ளது.. இங்கு உள்ள நகரசபை தலைவர் உட்பட உறுப்பினர்களுக்கு சரியான கண் பார்வையில்லை மக்கள் மீது நகரத்தின் மீது அக்கரையில்லை. ஓட்டுக்கும் அரசியலுக்கும் மட்டுமே மக்களை தேடுவார்கள்.

8 பாராளுமன்ற உறுப்பினர்களும் இவ்வழியில் தான் செல்கிறார்கள் ஆனால் யாருக்கும் கண்ணில்லை.  காரணம் சொகுசு வண்டிக்குள் உட்கார்ந்து கருப்பு கண்ணாடிகளை போட்டால் வாகனத்திற்கு வெளியில் எதுவும் தெரியாது தானே.
மழை காலங்களில் சாக்கடைகள் அடைப்படுவதால் மக்கள் நடமாடும் வீதிகளில் தான் அசுத்த கழிவு நீர்கள் வழிந்து செல்கிறது.

குப்பைகளை கொட்ட சரியான இடங்கள் இல்லாமயால் வீதி ஓராங்களில் மற்றும் கண்ட இடங்களில் கொட்டுகிறார்கள்.

ஹட்டன் பிரதான பஸ் நிலையத்திற்கு மழை காலங்களிலும் சரி வெயில் காலங்களிலும் சரி செல்ல முடியவில்லை. குன்றும் குழியுமாக உள்ளது. அங்கு அங்கே குப்பைகளை விசுவதால் அசுத்தமான துர்நாற்றங்கள்.. சரியான பொது மலசல கூட வசதிகள் இல்லை. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு பாதிக்கப்படுகிறார்கள்.

அதே போல் ஹட்டன் நகரசபை நகரத்தில் உள்ள குப்பைகளை கொண்டு வந்து நகரபையின் பின்னால் கொட்டி நிரப்பி வைத்துள்ளார்கள்..இதனால் நகரசபை வழியாக செல்ல முடியவில்லை அவ்வளவு துர்நாற்றம் இதை யாரும் கண்டுக்கொள்வதில்லை..நகரசபை பக்கத்தில் தான் பன்சல விகாரை உள்ளது ஆனால் அங்கு உள்ள பிக்கு சாமி அவர்களுக்கு இந்த துர்நாற்றம் தெரிவதில்லையா..?

பன்சல பக்கத்தில் தான் பாலர் பாடாசாலை உள்ள அங்கு உள்ள ஆசிரியர்களுக்கு தெரிவதில்லையா..?அந்த வழியாக தான் நீதி மன்றத்திற்கு செல்லும் வழி அந்த வழியாக செல்லும் நீதவான் மற்றும் வழக்கறிஞர்களுக்கு தெரியவில்லையா..? சிங்கள ஸ்ரீ பாத பாடசாலை மற்றும் கல்வி திணைக்களம் உள்ளது அங்கு வரும் உயர் அதிகாரிகளுக்கு இந்த குப்பை அசுத்தமான துர்நாற்றம் தெரிவதில்லையா.
? அல்லது யாருக்கும் மூக்கு இல்லையா..?அல்லது சுவாசிக்கும் தன்மை தான் இல்லையா..?

இந்த குப்பை துர்நாற்றங்களால் அதிகமாக பாதிக்கப்படுவது குழந்தைகளே.
அதே நேரம் நோய்கள் பரவும் அபாயமும் அதிகம் உள்ளது..

இந்த பிரச்சனைகளுக்கு சரியான தீர்வுகள் எடுக்க விட்டால் எதிர்காலத்தில் பெறும்பிரச்சனைகளுக்கு நாம் முகம் கொடுக்க நேரிடும்.. இதில் கட்சி பேதம் பார்க்க வேண்டாம் யார் எந்த கட்சியாக இருந்தாலும் சரி நாம் வாழும் பிரதான நகரம் இந்த இடத்தை இந்த நகரத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது நம் கடமை… மக்களும் புரிந்து செயல்படுங்கள் மீண்டும் மீண்டும் அரசியல்வாதிகளின் பேச்சுக்களை கேட்டு ஏமாறால் தயவு நகரத்தின் மற்றத்திற்கு வழி தேடுங்கள்…

B.ராஜ்பிரசாத்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here