உலகளாவிய 3வது திறனாய்வுப் போட்டி: நீங்களும் விண்ணப்பிக்கலாம்

0
225

 தமிழ் இலக்கிய உலகில் புகழ் பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் தமிழ் இலக்கிய சேவையைப் பாராட்டும் முகமாகவும், வாசிப்பு, எழுத்துப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கமாகவும் இடம்பெறும் குரு அரவிந்தன் எழுதிய நாவல், சிறுகதை தொடர்பான திறனாய்வுப் போட்டி. 15 பரிசுகள், மொத்தம் 1,50,000 ரூபாய்கள், இலங்கை ரூபாயில் வழங்கப்படும்.

முதலாம் பரிசு இலங்கை ரூபாய்கள்   –  30,000., இரண்டாவது பரிசு இலங்கை ரூபாய்கள் –  25,000., மூன்றாவது பரிசு இலங்கை ரூபாய்கள்  –  20,000., நாலாவது பரிசு இலங்கை ரூபாய்கள்   –  15,000., ஐந்தாவது பரிசு இலங்கை ரூபாய்கள்   –  10,000. 10 பாராட்டுப் பரிசுகள் இலங்கை ரூபாய்கள் தலா – 5000.

குரு அரவிந்தன் அவர்களின் படைப்புகளுக்கான திறனாய்வுப் போட்டி. குறைந்தது 2 புதினங்கள் அல்லது 4 சிறுகதைகள் பற்றி உங்களின் கருத்துரைகளைத் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் 5 பக்கங்களுக்குள் அல்லது 1600 சொற்களுக்கு மேற்படாமல் யூனிக்கோட் மற்றும் வேர்ட் அச்சுப்பிரதியாக அனுப்பவும். மாணவ, மாணவிகளாயின் தனியாகக் குறிப்பிடவும். வயது வரம்பு இல்லை. ஒருவர் ஒரு கட்டுரை மட்டுமே அனுப்பலாம். பரிசுபெற்ற கட்டுரைகளைத் திருத்தி நூலாக வெளியிடும் உரிமை வாசகர் வட்டத்திற்கு உரியது.

மின்னஞ்சல் வழியாக ஆங்கிலத்தில் உங்களின் முழுப்பெயர், தெளிவான அஞ்சல் முகவரி, மின்னஞ்சல் முகவரி, செல்போன் எண் விவரங்களோடு அனுப்பவேண்டும். உங்கள் திறனாய்வு எமக்குக் கிடைக்க வேண்டிய கடைசி நாள்: 31. 03. 2025 போட்டி முடிவுகள் 30 ஆம் திகதி ஏப்ரல் மாதம் 2025 இணையத்தில் வெளியிடப்படும்.

மின்னஞ்சல்: [email protected]

கதைகளை வாசிக்க இணையம்:    https://kurunovelstory.blogspot.com/          http://tamilaram.blogspot.com/             https://canadiantamilsliterature.blogspot.com/

செயலாளர், குரு அரவிந்தன் வாசகர் வட்டம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here