குளவி கொட்டுக்கு இலக்காகி 10 மாணவர்கள் வைத்தியசாலையில்

0
50

பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் குளவி கொட்டு இலக்காகி 10 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

17 அன்று பகல் 12 ‌. மணியளவில் அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட. கோட்டம் 03 பொகவந்தலாவ எலிபடை தமிழ் வித்யாலயா மாணவர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஆண்கள் 04 பெண்கள் 4 மொத்தமாக 08 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக. வைத்திய அதிகாரி ஏ.எஸ் கே ஜயசூரிய குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்கள் குறிப்பிடுதல் பாடசாலையில் தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறுவதாகும். அடிக்கடி குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் மாணவர்களை அனுமதிக்கின்ற சம்பவங்கள் இடம் பெறுவதாகும் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் தான் ஒவ்வொரு நாளும் வேதனை அடைய வேண்டிய நிலை இருப்பதாக பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கவலை அடைவதோடு  பாடசாலையில் பின்புறத்தில் உள்ள பாரிய மரத்தில் குளவிகள் கட்டப்படுவதால் தொடர்ச்சியாக இவ்வாறான பிரச்சினைகள் நிகழ்கின்றன எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பிள்ளைகளின் பாதுகாப்பு நலன் கருதி மரத்தில் கட்டப்பட்டுள்ள குளவி கூடுகளை அப்புறப்படுத்தி பிள்ளைகள் பாதுகாப்புடன் கல்வி நடவடிக்கையை தொடர்வதற்கு  நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here