காரைதீவு கூடைப்பந்தாட்ட கழகத்தின்(KBC) 11 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு காரைதீவு கூடைப்பந்தாட்ட கழகமும் , ASCO அமைப்பும் இணைந்து நடத்திய கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் காரைதீவு கூடைப்பந்தாட்ட கழகமும் கல்லடி சிவானந்தா விளையாட்டுக் கழகமும் இணைச்சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டன.
இப் போட்டி காரைதீவு விபுலானந்தா விளையாட்டு மைதானத்தின் கூடைப் பந்தாட்ட திடலில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது .
இரண்டாவது வருடமாக இடம்பெற்ற இச் சுற்றுப் போட்டியில், காரைதீவு கூடைப்பந்தாட்ட கழக அணியும் சிவானந்த விளையாட்டு கழக அணியும் மோதின.
இறுதி வரைக்கும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 55 க்கு 55 என்ற புள்ளி அடிப்படையில் போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றது .
விளையாட்டு உத்தியோகத்தர் பத்மநாதன் வசந்த் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் அதிதிகளாக காரைதீவு பிரதேச சபை செயலாளர்
ஏ. சுந்தரகுமார், அஸ்கோ அமைப்பின் செயலாளர் சி. நந்தகுமார், சிவானந்த விளையாட்டு கழகத் தலைவர் ரி. ஜெகன், ஓய்வுநிலை உதவிக்கல்விப் பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா, உத்தரவு பெற்ற நில அளவையாளர் வி. ராஜேந்திரன், விளையாட்டு உத்தியோகத்தர் வி. பாஸ்கரன், இளைஞர் சேவை உத்தியோகத்தர் எஸ். ராதிந், விவேகானந்தா விளையாட்டு கழக தலைவர் வி.தயாபரன், ரிமைண்டர் விளையாட்டு கழக செயலாளர் எஸ்.மயூரவேல் ஆகியோர் கலந்துகொண்டு கிண்ணங்களையும் பதக்கங்களையும் வழங்கினார்கள்.
பத்மநாதன் மதிராஜ் போட்டி வர்ணனையாளராக செயற்பட்டார்.
( வி.ரி.சகாதேவராஜா)