கெர்கஸ்வோல்ட் இல 02. பாடசாலையின் பழைய மாணவர்களுக்கிடையிலான கிரிக்கட் சுற்றுப்போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும்
1ம் நிகழ்வு
தேவையா?, முடியுமா?, சாத்தியமா?, பிரச்சினைகள வராதா?, என பல்வேறு எதிர்மறை கேள்விகளோடு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வு எல்லா கேள்விகளுக்குமான பதிலாக அமைந்திருந்தது.
1997ம் ஆண்டு முதல் 2021 ம் ஆண்டு வரை பாடசாலை அணியினையும் சேர்த்து 24 அணிகளில் 75% அணிகளின் (16 அணிகள்) பங்களிப்போடு வெற்றிகரமாக இடம்பெற்றது.
இது ஒரு களியாட்ட நிகழ்வல்ல. எமது பாடசாலையின் பழைய மாணவர்களின் பங்களிப்பினை அதிகரித்து பாடசாலையின் உட்கட்டமைப்பு, கல்வி போன்ற விடயங்களில் மேலும் மேம்மடுத்துவதே நோக்கமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டது.
எந்தவித எதிர்நிலை சம்பவங்களும் இடம்பெறாமல் இருந்தமை பழைய மாணவர்களின் புரிந்துணர்விற்கும், கட்டுகோப்பிற்கும் சான்று பகர்கின்றது.
2ம் நிகழ்வு
நாட்டின் இன்றைய பொருளாதார நிலைமையினைவிடவும் இதற்கு முன்பதான கொரோனா நிலைலையிலும் பல சவால்களுக்கு மத்தியில் தரம் 5 புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றிய 34 மாணவர்களையுமே கௌரவித்து ஊக்கமளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
3 ம் நிகழ்வு
2021 ம் ஆண்டு கொரோனா சூழ்நிலையிலும் கற்கையினை தொடந்து கல்வி பொது தராதர சாதாரணத்தர பரீட்சையில் சித்தி பெற்று உயர்தரம் சென்ற 13 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.
4ம் நிகழ்வு
கெர்கஸ்வோல்ட் இல 2 எமது பாடசாலையில் கல்வி கற்று ஒரு ஆசிரியராகவிருக்கின்ற அதேவேளை திறந்த பல்கலைக்கழகத்தில் Master of Education கற்கையில் சித்தி பெற்று பட்டம் பெற்ற பழைய மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் ப விஜயகாந்தன் அவர்களும் கௌரவிக்கப்பட்டார். (எமது பழைய மாணவர் ஒன்றியம் இத்தனை செயலூக்கத்துடன் செயற்பட தலைமை தரும் செயலாளர். பட்டம், பதவிநிலையினை பொருட்படுத்தாது தலையில் தூக்கி வைத்துக்கொள்ளாது ஒரு பழைய மாணவனாக எப்போதும் செயற்படும் ஒருவர்)
5 ம் நிகழ்வு
பாடசாலைக்கென ஒலியமைப்பு இல்லாத நிலையில் 16 அணிகளின் பங்களிப்பில் பாடசாலைக்கென ஒரு ஒலியமைப்பு கருவி ( Sound system) வழங்கி வைக்கப்பட்டது.
6 ம் நிகழ்வு
நிகழ்வின் மகுடமாக எமது பாடசாலையில்
2013 – 2021 வரை அதிபராக செயற்பட்ட திரு. அருளானந்தன் அவர்கள்,
2021 – 2022 வரை அதிபராக செயற்பட்ட திரு. சுந்தரேசன் அவர்கள்
2022 பாடசாலையினை பொறுப்பேற்ற திரு. இராதாகிருஸ்னன் அவர்கள்
என மூவரும் பாடசாலைக்கு வழங்கிய, வழங்கிவரும் உன்னத சேவைகளுக்காக கௌரவிக்கப்பட்டனர்.